தாயை பிரிந்து த‌வி‌க்கு‌ம் குட்டியானை

வியாழன், 15 டிசம்பர் 2011 (09:17 IST)
பவானிசாகர் அருகே தண்ணீர் குடிக்க வந்தபோது பிரிந்த குட்டியானையை தேடி தாய் யானை வருமா என வனத்துறையினர் காத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதிக்குட்பட்டது சுஜில்குட்டை வனப்பகுதி. இதன் அருகே உள்ள பூதிகுப்பை என்ற இடத்தில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு காட்டு யானைகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

நேற்று காலை தண்ணீர் குடிக்க யானைகள் வந்தபோது ஆறு மாதம் கொண்ட குட்டி ஒன்று தண்ணீருக்குள் நீந்தி சென்றது.
அப்போது மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையில் சிக்கியது. இதை கவனிக்காத தாய் யானை மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது.

இந்த நிலையில் மீன்படிக்க சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிதவித்த குட்டியானை குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ரேஞ்சர் சதாசிவம் தலைமையில் வனத்துறையினர் தாயிடம் இருந்து தப்பிய குட்டியானைக்கு குள்கோஸ், இளநீர் உள்ளிட்ட உணவுகள் கொடுத்து அதே இடத்தில் தன் குட்டியை தேடி தாய் யானை வருமா என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்