‌ச‌‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌மீது வைகோ சாட‌ல்

புதன், 31 ஆகஸ்ட் 2011 (13:27 IST)
தமிழசட்டபபேரவதீர்மானம் ம‌த்‌திய அரசை கட்டுப்படுத்தாது எ‌ன்று கூ‌றிய ச‌ட்ட‌‌த்துறை அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌‌மீது ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கடுமையாக சாடியு‌ள்ளா‌ர்.

ராஜீவகொலவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள பேர‌றிவாள‌‌ன், சா‌ந்த‌ன், முருக‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் மரதண்டனையஆயுளதண்டனையாகககுறைக்கும்படி தமிழசட்டப்பேரவையில் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ‌நிறைவே‌ற்‌றி உ‌ள்ள தீர்மான‌த்தை ம‌த்‌திய ச‌ட்ட‌த்துறை அமை‌‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌விம‌ர்‌சி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌‌விம‌ர்ச‌னத்து‌க்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செய‌ல‌‌ர் வைகோ கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்ஷ‌ி‌த் தவறான தகவலை த‌ந்து‌ள்ளா‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ள வைகோ, ம‌த்‌திய அர‌சி‌ன் ப‌ரி‌ந்துரை படியே குடியரசு‌த் தலைவ‌ர் முடிவெடி‌ப்பதே நடைமுறை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கருணை மனுவை ‌நிராக‌ரி‌ப்ப‌தி‌ல் குடியரசு‌த் தலைவரு‌க்கு த‌‌னி‌ப்ப‌ட்ட அ‌‌திகார‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் வைகோ ஆ‌ணி‌த்தரமாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்