த‌மி‌‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஒரே க‌ட்டமாக தே‌ர்த‌ல்?

செவ்வாய், 4 ஜனவரி 2011 (13:05 IST)
த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி, கேரளா‌வி‌ல் ஒரே நா‌ளி‌ல் வா‌க்கு‌ப் ப‌‌திவு நட‌த்த தே‌ர்த‌ல் ஆணைய‌ம் முடிவு செ‌ய்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கி உ‌ள்ளது.

மே‌ற்கு வ‌‌ங்க‌ம், அ‌ஸ்ஸா‌மி‌ல் 3 க‌ட்டமாக தே‌ர்த‌ல் நட‌‌த்தவு‌‌ம் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் முடிவு செ‌ய்‌திரு‌ப்பதாக தெ‌ரி‌கிறது.

ப‌ண்டிகை, உ‌ள்ளூ‌ர் ‌திரு‌விழா‌க்க‌ள், தே‌ர்வுக‌ளை மன‌தி‌‌ல் கொ‌ண்டு தே‌ர்த‌ல் தே‌தியை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌க்க உ‌ள்ளது. இநேகமான தே‌‌ர்த‌ல் தே‌‌தி அடு‌த்த வார‌ இறு‌தி‌க்கு‌ள் முடிவாகு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

5 மா‌நில‌ங்க‌ளிலு‌ம் மே 1ஆ‌ம் தே‌தி‌யி‌ல் இரு‌ந்து 15ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் வா‌க்கு‌ப் ப‌திவை நட‌த்த ‌தே‌ர்த‌ல் ஆணைய‌ம் தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளது.

த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி, கேரளா‌வி‌ல் அ‌‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்‌சிகளுட‌ன் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ச‌‌மீப‌த்த‌ி‌ல் ஆலோசனை நட‌த்‌தி முடி‌த்துவி‌ட்டது. மே‌ற்கு வ‌ங்க‌ம், அ‌ஸ்ஸா‌மி‌ல் ஒருநா‌ளி‌ல் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ஆலோசனை முடிவடை‌கிறது.

இத‌னிடையே ஜனவ‌ரி 1இ‌ல் இரு‌ந்து 18 வயது ‌நிர‌ம்‌பிய‌வ‌ர்களை வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் சே‌‌ர்‌க்க தே‌ர்த‌ல் ஆணைய‌ம் முடிவு செ‌ய்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்