சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வே‌ண்டுகோ‌ள்

வியாழன், 23 டிசம்பர் 2010 (08:40 IST)
ஆ‌ந்‌திர ம‌க்க‌ளி‌ன் நலனை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை கை‌விடுமாறு தெலுங்கு தேச‌ம் க‌ட்‌சி‌த் தலைவர் சந்திரபாபு நாயுடு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணாந‌ி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

மரு‌த்துவமனை‌யி‌‌ல் தொட‌ர்‌ந்து உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் ச‌ந்‌திரபாபு நாயுடுவு‌க்கு அனு‌ப்‌பியு‌ள்ள த‌ந்‌தி‌யி‌ல், உங்களுடைய மதிப்பு மிக்க சேவை இந்திய நாட்டிற்கும், குறிப்பாக ஆந்திர மாநிலத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

எனவே, நாட்டு நலனை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கருணா‌நி‌தி கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஆந்திராவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, இன்று 7வது நாளாக உண்ணாவிரம் இருந்து வருகிறார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்