பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - வைகோ

ஞாயிறு, 28 நவம்பர் 2010 (13:09 IST)
சென்னையில் நேற்று நடைபெற்ற வீர வணக்க நாள் போதுக்கூட்டத்தில் கலந்து கோன்ட ம.தி.மு.க. தலைவர் வைகோ பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் விரைவில் வெளியே வருவார் என்றும் கூறியுள்ளார்.

"28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.

பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுத லைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரசாம் நடக்கிறது. இது நீடிக்காது.

தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணு வத்துக்கு அங்கு என்ன வேலை?

பழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்.

இவ்வாறு வைகோ பேசினார்

வெப்துனியாவைப் படிக்கவும்