விழுப்புரத்தில் மலைக்கோட்டை விரைவு ரெயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் தண்டவாளம் தகர்க்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிக்கையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தாஅர்.
"விழ்ப்புரத்தில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தீவிரவாத, பயங்கரவாத செயலுக்கான முயற்சில்
தமிழக காவல்துறையும், உளவுத் துறையும் இணைந்து செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் என்னைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியாகப் பார்க்கவில்லை. இது மக்கள் உயிர் சம்பந்தப்பட்டது."