தமிழகத்தில் செப்.7 வரை மழை நீடிக்கும்: மழைராஜ் தகவல்
புதன், 2 செப்டம்பர் 2009 (15:42 IST)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என ஆராய்ச்சியாளர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தென்கேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூருக்கு தென் கிழக்கே குறந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் நிலை உள்ளது.
இதனால் சென்னை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யலாம். திருச்சி, கரூர், ஈரோடு, திண்டுக்கல், பெரம்பலூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.