தமிழகத்தில் இன்று நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை துவங்கிய வாக்குப்பதிவு தொடங்கி, அமைதியாக நடைபெற்றது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப் பதிவு முழுவதும் மடிக்கணினி மற்றும் வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மாலையிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
இந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 72 சதவீத வாக்குகளும், இளையான்குடி தொகுதியில் 66 சதவீத வாக்குகளும், கம்பம் தொகுதியில் 76 சதவீத வாக்குகளும், பர்கூர் தொகுதியில் 71 சதவீத வாக்குகளும், தொண்டாமுத்தூரில் 58 சதவீத வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடந்த 5 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 66 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.