கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் எஸ்.பாலமுருகன் பிளஸ்2 தேர்வில் 1,176 மார்க் பெற்று இருந்தார்.
TN.Gov.
TNG
இவர், தேர்வு நன்றாக எழுதியும் மார்க் குறைந்த அளவே கிடைத்திருப்பதாக கருதினார். எனவே மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பித்து இருந்தார்.
இதில் மாணவர் பாலமுருகனுக்கு தமிழில் கூடுதலாக 8 மதிப்பெண் கிடைத்திருந்தது. இதனால் அவருக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண் 195 ஆனது. இதைத்தொடர்ந்து, பாலமுருகன் பெற்ற மொத்த மதிப்பெண் 1,184 ஆக உயர்ந்து விட்டது. இது ஏற்கனவே முதல் இடத்தை பிடித்த 4 பேர் பெற்ற மதிப்பெண்ணை விட ஒரு மார்க் அதிகம் ஆகும்.