வங்கக் கடலில் புயல் - வானிலை

வியாழன், 16 ஏப்ரல் 2009 (20:13 IST)
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிஜ்லி (BIJLI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 300 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும், மேலும் வலுவடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிஜ்லி புயலால் தமிழ்நாடு, கேரளாவிற்கு பாதிப்பிருக்காது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதிகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாடு, கேரளா, தெற்கு கடலோரப் ஆந்திரா, கேரளாவில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 60-70 கி.மீ. வேகத்தில் புயல் காற்று விசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்