ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
மழை பற்றி ஆய்வு செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், எமது தமிழ்.வெப்துனியா.காம்-மிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தெற்கு கடலோர மாவட்டங்களிலும், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்பட தென் மாவட்டங்களிலும் ஏப்ரல் 5 அல்லது 6ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, நாகை, தஞ்சை உட்பட கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும். ஏப்ரல் 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மேற்கண்ட தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உட்பட தமிழக கடல் பரப்பில் கடல் சீற்றமும் காணப்படும்.
நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி ஏப்ரல் 6, 21 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.