''வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும்'' என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிட் பேசிய அவர், பா.ஜ.க.யை பொருத்தவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அமைப்பு ரீதியாக தேர்தல் பணியை துவங்கிவிட்டோம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆய்வு செய்துவிட்டோம்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதா அல்லது ஓரிரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதா என்பதை 12ஆம் தேதி நடக்கும் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இம்மாதம் 15ஆம் தேதி வேட்பாளர் விபரங்களை முறைப்படி அறிவிப்போம். தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து போட்டியிடவே முடிவு செய்துள்ளோம். மேலும் தேர்தலுக்காக இணைதள தொலைக்காட்சியை பா.ஜ.க. தொடங்க உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்போம் என்றார்.