இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரும் என்னரும் நண்பர்களில் ஒருவருமான தோழர் தா.பாண்டியனின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது என்ற செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறியுள்ள கருணாநிதி, எந்த நிலையில் அச்செயலை யார் புரிந்திருப்பினும் அவர்களை, காவல்துறை கண்டுபிடித்து அவர்கள் உரிய தண்டனை பெற்றிட நடவடிக்கை எடுத்திட அரசின் சார்பில் எல்லா வகையான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.