இலங்கையில் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடிகர் கார்த்திக் கட்சி முதன் முறையாக இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், இலங்கைப் பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்றும், அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தலையிட்டு, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.