இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது விடுமுறையில் உள்ள மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாய கல்லூரிகள் வரும் 9ஆம் தேதி (திங்கட் கிழமை) முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் மற்ற கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.