பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முதுகுவலியால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதிக்கு காலை 8.35 மணிக்கு வந்தார். பின்னர் அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் வந்திருந்தனர்.
முன்னதாக தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.