கல்லூரிகளை திறக்க மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

''மாணவர்கள் தேர்வு எழுதி வருவதால் கல்லூரிகளை திறக்க வேண்டும்'' என்று அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த அ‌ந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், இலங்கை‌த் தமிழ் மக்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். அதை சிதறடிக்கும் நோக்கில் தமிழக அரசு கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் வருகை புரிந்து பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தேர்வுகள் நடந்து வருவதால் கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும்.

இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு முழுமையாக கலந்து கொள்ளும். போராட்டத்தில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்