திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் விலக்கல்
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (10:26 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், அப்பாவி தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 29ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தமிழரசன், சதீஷ், ஆர்.சதீஷ் ஆகியோர் மயங்கினர். இந்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், நேற்று மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி விமான நிலையம் அருகே சட்டக்கல்லூரி 2ம் ஆண்டு மாணவர் அன்பரசன் உட்பட 15 பேர் நேற்றுஅமறியலில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
பின்னர், டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி.) அலுவலகம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.