த‌ன்னிச்சையான போராட்டத்தை கைவிட பழ.நெடுமாறன் வேண‌்டுகோ‌ள்

இல‌ங்கை‌த் த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்சன‌ை‌க்காக த‌‌ன்னி‌ச்சையான போரா‌ட்ட‌த்தை கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களின் அவலநிலையை கண்டும், இந்திய அரசின் செயலற்ற நிலையை கண்டும் பல இடங்களில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டங்களை நடத்தி வரும் செய்திகளும், மற்றும் சில இடங்களில் உணர்வாளர்கள் சிலர் தங்களை தாங்களே மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் செயல்களையும் அறிந்து இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை தலைவர்களும் அளவிட முடியாத மனவேதனை அடைந்திருக்கிறோம்.

தமிழக மக்களும் பதற்றமடைந்துள்ளனர். மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்து பாராட்டும் அதே வேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து‌க் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றுபட்டு பெரும் போராட்டங்கள் நடத்த இருப்பதால் ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய போராட்டங்களை கைவிடுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறே‌ன் எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.