திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (38). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உழவர் விடுதலை முன்னணி அமைப்பில் உறுப்பினராக உள்ள இவர், நேற்றிரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய நிலையில் ரவியை தூக்கி கொண்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை பெற்று வரும் ரவியின் மனைவி சித்ரா கூறுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்து வருவதை எனது கணவர் பத்திரிகை மூலம் அறிந்தார். மேலும் தொலைக்காட்சியிலும் தமிழர்கள் படுகொலை சம்பவம் ஒளிபரப்பப்பட்டது. இதனை கண் முன்னே பார்த்த அவர் வேதனை அடைந்தார். இப்படி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டும், ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அவர் தனது உடலில் நெருப்பை வைத்துக் கொண்டார் என்றார்.