முத்துக்குமாரு‌க்கு 2-வது நாளாக அஞ்சலி: இன்று உடல் அட‌க்க‌ம்

இலங்கை‌த் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் உடலுக்கு 2-வது நாளாக பொதுமக்கள், மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட ஏராளமானோ‌ர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மதியம் 2 மணிக்கு முத்து‌க்குமார் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

முத்து‌க்குமார் இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர்மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை சென்றடைகிறது. இதற்காக வழி நெடுகவும் ஏராளமான காவல‌ர்க‌ள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மு‌த்து‌க்குமாரு‌க்கு அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌ம் ‌விதமாக கொளத்தூர் பகுதியில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்