4வது நாளாக சேலத்தில் மாணவர்கள் உ‌ண்ணா‌விரத‌ம்

சனி, 31 ஜனவரி 2009 (11:11 IST)
இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌சி‌ங்கள ராணுவ‌த்தா‌ல் கொ‌ல்ல‌ப்படுவதை க‌ண்டி‌த்து‌ம், உடனடியாக போரை ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தியு‌ம் சேல‌ம் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 4வது நாளாக உ‌ண்ணா‌விரத‌ போரா‌ட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மாணவர்களில் 3 பேர் மயக்கமடைந்தனர்.

நேற்றைய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ்கண்ணா என்ற மாணவர் ஏற்கனவே மயக்கம் அடைந்தார். நேற்‌றிரவு 9 மணிக்கு தேவராஜ், அன்புச்செல்வன் எ‌ன்ற மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக சேலம் அரசு மரு‌த்துவமனையி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

மாணவர் தேவராஜ் இடைப்பாடி அருகே உள்ள அந்திப்பள்ளியை சேர்ந்தவர். இன்னொரு மாணவர் அன்புசெல்வன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடத்தை சேர்ந்தவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்