திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நேற்றிரவு அரசு சொகுசு பேருந்து ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள சுங்குவார்சத்திரம் சிவபுரத்தில் நேற்றிரவு 10.30 மணி அளவில் அரசு சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து, பயணிகள், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை கீழே இறக்கி விட்டு பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இதில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. இது பற்றி தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பேருந்துக்கு தீ வைத்தது தொடர்பாக சிலர் பிடிபட்டு உள்ளதாகவும் மேலும் பலரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.