திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 வது நாளாக உண்ணாவிரதம்
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:47 IST)
இலங்கையில் போரை நிரந்தரமாக நிறுத்தி அங்கு அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகளையும் ஆயுதங்களையும் இந்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சட்டக்கல்லூரி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடிக்கிறது. நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் பந்தலிலேயே படுத்து தூங்கினர்.
2-வது நாள் என்பதால் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் சோர்வுடன் காணப்பட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் நீடிக்கும் என மாணவர்கள் கூறினர்.