சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அவர், முத்துக்குமார் என்ற வாலிபர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்துள்ளார். தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அது உணர்ச்சிவசப்பட்டு செய்யக்கூடிய செயல் என்றும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும் முதலமைச்சர் ஒப்புதலுடன் முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.