ஈழ‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக உ‌யி‌ர்‌ ‌தியாக‌ம் செ‌ய்த முத்துக்குமர‌னு‌க்கு அஞ்சலி

இலங்கையிலபோர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று ‌தீ‌க்கு‌ளி‌த்தஉ‌யி‌ர் ‌தியாக‌‌மசெ‌ய்இளைஞ‌ரமுத்துக்குமர‌னுக்கஅர‌சிய‌லதலைவ‌ர்கள‌், மாணவ‌ர்க‌ளஉ‌ள்பப‌ல்வேறதர‌ப்‌பின‌ரஅ‌ஞ்ச‌லி செலு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

webdunia photoFILE
முத்துகுமர‌ன் உடலுக்கு நேற்று மாலை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இலங்கை நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரசிவாஜி லிங்கம், நடிகர் டி.ராஜேந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முத்துக்குமர‌னஉயிர் தியாகத்தை கவுரவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை உள்பட ஏராளமான தமிழ் அமைப்புகள் விரிவான ஏற்பாடுகள் செ‌‌ய்து‌ள்ளன.

முத்துக்குமர‌னஉடலுக்கு அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது. நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமர‌ன் உடல் எடுத்து வரப்பட்டு குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமர‌‌‌னி‌னஉடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தின‌ர். செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி மாணவர்களும் அஞ்சலி செலுத்தின‌்.

இதேபோ‌லபல்வேறு கட்சித் தலைவர்கள் முத்துக்குமர‌னஉடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தின‌ர். தே.மு.தி.க. சார்பில் சுதீஷ் 100 பேருடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முத்துக்குமர‌னின் உயிர் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொளத்தூர், பெரம்பூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இன்று மாலை முத்துக்குமர‌னி‌னஉடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படு‌‌கிறது.

மு‌த்து‌க்குமர‌னி‌‌ன் உடலு‌க்கு அ‌‌ஞ்ச‌லி செலு‌த்‌தியவ‌ர்க‌ளி‌‌ல் 90 ‌சத‌வீத‌ம் பே‌ர் இளைஞ‌ர்க‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.