நெ‌ல்லை: ப‌‌லியானவ‌ர்க‌ள் குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தி

நெ‌ல்லை அருகே இ‌ன்று அ‌திகாலை ஏ‌ற்ப‌ட்ட சாலை ‌விப‌த்‌தி‌ல் ப‌லியானோ‌ரி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு தலா ரூ.50 ஆ‌யிர‌ம் ‌நிவாரண உத‌வி வழ‌‌‌ங்க முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல், நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் ச‌ங்க‌ர்நக‌ர் அருகே இ‌ன்று அ‌திகாலை சர‌க்கு லா‌ரி ஒ‌ன்று‌ம், பய‌ணிக‌ள் வே‌ன் ஒ‌ன்று‌ம் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 15 பே‌ர் உ‌‌யி‌ரிழ‌ந்து உ‌ள்ளன‌ர். மேலு‌ம் 5 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு தனது ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ப‌லியானோ‌ரி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு முதலமை‌ச்ச‌ர் ‌நிவாரண ‌நி‌தி‌யி‌ல் இரு‌ந்து தலா ரூ.50 ஆ‌யிர‌ம் ‌வீத‌ம் 7.5 ல‌ட்ச‌ம் ரூபாயு‌ம், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு தலா ரூ.10 ஆ‌யிர‌ம் ‌நி‌தியுத‌வி வழ‌ங்க முதலமை‌ச்ச‌ர் கருண‌ா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்