செ‌ன்னை‌யி‌ல் 29ஆ‌ம் தே‌தி முத‌ல் அரசு மரு‌த்துவ‌ அலுவல‌ர் ப‌ணி‌க்கு கல‌ந்தா‌ய்வு

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:05 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌ங்க‌ள் ‌ம‌ற்று‌ம் அரசு மரு‌‌த்துவமனைக‌ளி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ அலுவல‌ர் கா‌லி‌ ப‌‌ணி‌யிட‌ங்களு‌க்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌கிறது எ‌ன்று மக்கள் நல்வா‌ழ்வு‌ மற்றும் குடும்ப நலத்துறை அமை‌ச்ச‌ர் எ‌ம்.ஆ‌ர்.கே.ப‌ன்‌‌னீ‌ர் ச‌ெ‌ல்வ‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமி‌ழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செ‌ய்ய 15.10.2008 முதல் 20.10.2008 வரையிலும் 26.11.2008 முதல் 28.11.2008 வரையிலும் 22.12.2008 மற்றும் 23.12.2008 தேதிகளில் கலந்தா‌ய்வு நடைபெற்று 853 மருத்துவர்கள் நியமனம் செ‌ய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு வேலைவா‌ய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர்பட்டியல் பெறப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல், கலந்தா‌ய்வு நடத்தப்பட உள்ளது.

கலந்தா‌‌ய்வில் பங்கு கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்துத்தெரிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அமை‌ச்ச‌ர் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்