பிப்ரவரி மாதமும் 3 லிட்டர் மண்எண்ணெ‌ய் : தமிழக அரசு

2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தலா மூன்று லிட்டர் வீதம் பொது விநியோகத் திட்டத்தில் மண்எண்ணெ‌ய் வழங்கப்பட்டது போல பிப்ரவரி மாதத்திற்கும் தலா 3 லிட்டர் வீதம் மண்எண்ணெ‌ய் வழங்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ஒரு சிலிண்டர் எரிவாயு இணைப்பு மட்டும் உள்ள மற்றும் சிலிண்டர் இணைப்பே இல்லாத, தகுதியுள்ள புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தலா மூன்று லிட்டர் வீதம் பொது விநியோகத் திட்டத்தில் மண்எண்ணெ‌ய் வழங்கப்பட்டது போல பிப்ரவரி மாதத்திற்கும் தலா 3 லிட்டர் வீதம் மண்எண்ணெ‌ய் வழங்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்