முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தார் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டித் தலைவருமான சோனியாகாந்தி இன்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்று பணி தொடர்ந்திட தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.