சென்னையில் குடியரசு தினவிழா: ஆளுநர் பர்னாலா கொடியேற்றினார்

திங்கள், 26 ஜனவரி 2009 (11:04 IST)
தமிழக அரசு சார்பில் சென்னை காந்தி சிலை அருகே நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இன்று காலை 7.55 மணியளவில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் அணிவகுக்க ஆளுநர் பர்னாலா காந்தி சிலை பகுதிக்கு வந்தடைந்தார். அமைச்சர் அன்பழகன் அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் காவல்துறை உயரதிகாரிகளை அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்ததார். இதையடுத்து 8 மணியளவில் தேசியக் கொடியை பர்னாலா ஏற்றியதுடன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுகையில், கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மலர் தூவியது. இதையடுத்து வீர தீரச் செயல்புரிந்தோருக்கான தமிழக அரசின் அண்ணா விருதுகளை அமைச்சர் அன்பழகன் வழங்கி கௌரவித்தார்.

முதுகு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்