சென்னையில் 3 பேர் உடல் கருகி பலி

ஞாயிறு, 25 ஜனவரி 2009 (14:48 IST)
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

மடிப்பாக்கத்தில் கட்டுமானப் பகுதி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசையில் கணவன், மனைவி அவர்களது 3 குழந்தைகளும் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் கணவனும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த மனைவியும், மற்றொரு குழந்தையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்