கருணா‌நி‌தி நாளை காஞ்‌சிபுரம் செ‌ல்‌கிறா‌ர்

சனி, 24 ஜனவரி 2009 (13:32 IST)
கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் நாளை நடைபெறு‌ம் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்ட‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கல‌ந்து கொ‌ண்டு பேசு‌கிறா‌ர்.

காஞ்‌சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறு‌ம் இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல், முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறனு‌ம் கல‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்‌சிபுரம் புறப்பட்டு செல்கிறார். அவருக்கு வழிநெடுக தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடு‌க்‌கி‌ன்றன‌ர்.

இது தொட‌ர்பாக காஞ்‌சிபுரம் மாவட்ட செயலரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், காஞ்‌சிபுரம் பொதுக் கூட்டத்தில் பேச வரும் முதலமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எ‌ன்று‌ம் இதில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்க வேண்டும் எ‌ன்று‌ம் கே‌‌ட்டு‌க் கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்