தமிழர்கள் ஓரணியில் திரள்வோம்: பாரதிராஜா

சனி, 24 ஜனவரி 2009 (12:37 IST)
இலங்கை‌த் தமிழர்களுக்காக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம் எ‌ன்று இய‌க்குன‌ரபாரதிராஜா வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையில், இலங்கையில் ராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 லட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.

முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோளை தற்போது சட்ட‌ப்பேரவை‌ மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பிரச்சனை என்றால், அனைவரும் ஓரணியில் திரள்வோம். ஒட்டுமொத்த சமூகமும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து, இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவர வழிவகை செய்யவேண்டும் எ‌ன்றபார‌திராஜகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்