சென்னையில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,447 கோடி அனுமத‌ி

வெள்ளி, 23 ஜனவரி 2009 (14:28 IST)
செ‌ன்னை‌யி‌லமழை‌நீ‌ரகா‌‌ல்வா‌ய்களமே‌ம்படு‌த்ம‌த்‌திஅரசூ.1,447 கோடி அனும‌தி அ‌ளி‌த்து‌ள்எ‌ன்றசெ‌ன்னமாநகரா‌ட்‌சி மேய‌ரா.சு‌ப்‌பிரம‌ணிய‌மதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாசெ‌ன்னமாநகராட‌்‌சி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னையில் வருடாந்திர மழைப் பொழிவு 1,300 மி.மீ. ஆகும். கடந்த 2005ம் ஆண்டு மட்டும் 2,570 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதமும் கடும் மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதை தவிர்க்க கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை இணைக்க சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த திட்டம் தயாரித்துள்ளது.
அதன்படி, மேற்படி கால்வாய்களை மேம்படுத்தவும், உபரியாக வரும் மழைநீரை வெளியேற்ற புதிய வடிகால்வாய்கள் அமைக்கவும், 16 புதிய கால்வாய்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் ரூ.1447.92 கோடியில் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக டெல்லியில் நேற்று மத்திய அரசு அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் மேற்படி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்