ம‌த்‌திய அரசு‌க்கு இறு‌தி வே‌ண்டுகோ‌ள்: ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்மான‌ம்

வெள்ளி, 23 ஜனவரி 2009 (09:25 IST)
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து, தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதலமைச்சர் கருணாநிதி, இந்த தீர்மானத்தை தாக்கல் செய்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரசசனை தமிழக சட்டப் பேரவையில் கடும் விவாதத்தை எழுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி.ு.க தலைமைக் கழகம் நே‌ற்‌றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது- இந்தியப் பேரரசுக்கு "இறுதி வேண்டுகோள்'' என்ற தலைப்பிட்டு, சட்டப் பேரவையில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி பேரவைத் தலைவர் மற்றும் பேரவையின் ஒப்புதலைப் பெற்று தீர்மானத்தை இ‌ன்றைய (23ஆ‌ம் தே‌தி) முன்மொழிவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்