சென்னையில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அமைக்க விதித்துள்ள தடையை நீக்குவது, தொழிற்சங்கங்களின் உரிமைகளை நிலைபெற செய்வது, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாநில பொதுச்செயலர் சௌந்தரராஜன், ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச்செயலர் எஸ்.எஸ். தியாகராஜன், எம்.எல்.எப். பொதுச்செயலர் அந்திரிதாஸ், ஏ.ஏ.ஐ.டி.யூ.சி.யைச் சேர்ந்த முருகன் உள்பட 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.