ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவு ‌திர‌ட்ட டெல்லியில் ‌பி‌ப்ரவ‌ரி 12ஆ‌ம் தே‌தி வைகோ உண்ணாவிரதம்

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும், பிப்ரவரி 12ஆ‌மதேதி அன்று டெல்லியில் நாடாளுமன்ற‌ம் அருகே ம.தி.மு.க. சார்பில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத்தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத்தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்து உள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது.

நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உள்ளனர். ஜனவரி 7ஆ‌ம் தேதி காசா பகுதியில் ஒரு கட்டடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்ட போது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும், பிப்ரவரி 12ஆ‌ம் தேதி அன்று இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே ம.தி.மு.க. சார்பில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்