ம‌க்களவை‌த் தேர்தலில் போட்டி‌: கொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை அ‌றி‌வி‌ப்பு

கொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை வரும் ம‌க்களவை‌த் தேர்லில் போட்டியிடும் என அந்த பேரவையின் மாநில பொதுசெயலர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், கொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் இதுவரை அரசியல் ரீதியான செயல்பாடுகள் இல்லாம‌ல் இருந்த காரணத்தால் ஆட்சியாளர்கள் கொங்கு பகுதியை புறக்கணித்து வருகின்றனர். இதனை மாற்றும் வகையில் கொங்கு வேளளக்கவுண்டர்கள் பேரவை அரசியல் அங்கீகாரத்தை பெற்றுதர போராடும்.

கடந்த ஒரே ஆண்டில் மூன்று மாநாடுகள் நடத்தியுள்ளோம். நான்காவது அரசியல் எழுச்சி மாநாடு அடுத்த மாதம் 15ஆம் தேதி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடக்க உள்ளது. எங்கள் கட்சிக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இருந்தாலும் வரும் ம‌க்களவை‌த் தேர்தலில் எங்கள் சமுதாயம் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் போட்டியிடுவோம்.

இதில் ஐந்து தொகுதியில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக நீக்கவும், பர‌பிக்குளம், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்றாயிரத்து 471 கிளைகள் துவங்கப்பட்டுள்ளது எ‌ன்று ஈஸ்வரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்