மாணவ‌ர்களை காவ‌ல்துறை அ‌ச்சுறு‌த்த‌க் கூடாது: தா.பா‌ண்டிய‌ன்

வியாழன், 22 ஜனவரி 2009 (10:13 IST)
இலங்கை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் 6 லட்சம் தமிழ் மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தை வகுப்புகளைப் புறக்கணிப்பதன் மூலம் மாணவர்கள் தொடங்கி இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு காவல்துறை எந்தவித அச்சுறுத்தலையும் செய்யக் கூடாது எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ள அவ‌ர், போராடும் மாணவர்கள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதியான முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்