அரசு பணியாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை
அரசு ஊழியர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத்தலைவர் மு. பிச்சையப்பா, பொதுச்செயலர் கு.முருகன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநர் தனது உரையில் மாநில அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்களுக்குரிய 7வது ஊதியத் திருத்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று, திருத்திய ஊதிய விகிதங்கள் விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
நிலுவைத்தொகை 1.1.2006 முதல் வழங்கப்படும் என்பது பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு அமுல்படுத்திட வேண்டும். 2 லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும் நிரந்தரப் பணியாளர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்கும் படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.