தமிழக சட்டப் பேரவை இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் தொடங்கியது.
அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றுவதால் அதன் தமிழாக்கத்தை அவைத்தலைவர் ஆவுடையப்பன் வாசிப்பார். அதோடு, இன்றைய நிகழ்ச்சி முடிவடைகிறது.
பிற்பகலில், அவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள் விவாதம் நடக்கும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அருந்ததியருக்கு இடஒதுக்கீடு தொடர்பான மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், தமிழக அரசின் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.