சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.தேன்மொழி சிவபெருமாள், மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சட்டத் துறை இணை செயலர் கான் யூசுப் பிறப்பித்துள்ளார்.
webdunia photo
FILE
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த தேன்மொழி, கடந்த 1989ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார்.
தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி உள்ள தேன்மொழியின் தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.