திண்டுக்கல் காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக (டி.ஐ.ஜி) இருந்த கிருஷ்ணமூர்த்தி மதுரை காவல்துறை துணை தலைமை ஆய்வாளராகவும், மதுரை காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக இருந்த அமரேஷ் புஜாரி திண்டுக்கல் காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக இருந்த மனோகர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) இருந்த சுந்தரேசன் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திருப்பரங்குன்றம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக (ஏ.எஸ்.பி) இருந்த பிரவீன் குமார் அபினவ் முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.