ராமதா‌ஸ், ‌திருமாவளவனு‌க்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை: ‌தி.மு.க. ‌விள‌க்க‌ம்

ஜெயல‌லிதாவு‌க்கு ஆதரவாக ஒரு சிலர் செயல்படுவது குறித்தும்தான் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறா‌ரே தவிர, பா.ம.க. தலைவர் ராமதாஸ் பற்றியோ, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் பற்றியோ கண்டனம் தெரிவித்ததாக மாலை ஏடுகள் சிலவற்றில் வெளியிட்டிருப்பது தவறானதாகும் எ‌ன்று தி.மு.க. தலைமைக்கழகம் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ‌தி.மு.க. தலைமை‌க்கழக‌ம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து இன்று (19.1.2009) முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியைக் கலைக்க ஜெயலலிதா செய்கின்ற தந்திரங்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் செய்கின்ற தந்திரங்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் செயல்படுவது குறித்தும்தான் தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்களே தவிர, பா.ம.க. தலைவர் ராமதாஸ் பற்றியோ, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் பற்றியோ கண்டனம் தெரிவித்ததாக மாலை ஏடுகள் சிலவற்றில் வெளியிட்டிருப்பது தவறானதாகும் எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்