இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ஆர்ப்பாட்டம்

இல‌ங்கை‌க்கு இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணியை அனு‌ப்ப‌க் கூடாது எ‌ன்று கோ‌ரி சமூக‌‌நீ‌தி பேரவை சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌‌‌ட்ட‌ம் ந‌டைபெ‌ற்றது.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் முன்பு நட‌ந்த இ‌ந்த ஆர்ப்பாட்ட‌த்‌தி‌‌ல் சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு, வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கலந்து கொண்டனர்.

அ‌ப்போது, இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது எ‌ன்று‌ம் இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எ‌ன்று‌ம் கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

மேலு‌ம், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா, இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்று கோஷங்க‌ள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்