ஈரோடு அருகே காட்டுயானை மதித்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு அருகே உள்ளது பவானிசாகர் அணை. இங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காட்டுபகுதியில் சுமார் 65 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்த பெண் உடல் அழுகிய நிலையில் இருந்தது. சுமார் ஆறு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. அருகில் காட்டு யானை வந்து சென்றதற்கான அறிகுறிகள் இருந்தது.
இதனால் யானை மிதித்து அந்த பெண் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.