புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் இன்று கொண்டாடப்பட்டது.
முதலமைச்சர் வி.வைத்தியலிங்கம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் அவைத் தலைவருமான ஏ.வி.சுப்பிரமணியன், புதுச்சேரி நகராட்சித் தலைவர் ஸ்ரீதேவி ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அ.இ.அ.தி.மு.க. செயலாளர் ஏ.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி, மனித நேய மக்கள் இயக்கம் ஆகிய கட்சியை சேர்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.