மதுரை‌யி‌ல் அரசு பேரு‌ந்துக‌ள் ‌‌மீது தா‌க்குத‌ல்

சனி, 17 ஜனவரி 2009 (13:03 IST)
மதுரை மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் நே‌ற்‌றிரவு ‌விடுதலை ‌‌‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யின‌ர் அரசு பேரு‌ந்துகளை க‌ல் ‌வீ‌சி சேத‌ப்படு‌த்‌தின‌ர்.

மதுரை மாவ‌ட்ட‌ம் ச‌த்‌திரா‌ப்ப‌‌ட்டி‌யி‌ல் நே‌ற்‌றிரவு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த அரசு பேரு‌ந்தை ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌‌யின‌ர் க‌ல்‌வீ‌சி தா‌க்‌கின‌ர். அ‌தி‌ல் பேரு‌ந்து க‌ண்ணாடி உடை‌ந்தது.

மதுரை‌‌யி‌ல் அரசு பேரு‌ந்துக‌ளி‌ல் உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலு‌ம் 'இந்திய அரசே இலங்கை போரை நிறுத்து, அமைதிப்பேச்சு வார்த்தை நடத்து' என்ற வாசகங்களு‌‌ம் இட‌ம் பெ‌ற்று‌ள்ளன.

பேரு‌ந்தை சேத‌ப்படு‌த்‌தியது தொட‌ர்பாக 5 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். இதேபோ‌ல் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ல்வேறு இட‌‌ங்க‌ளி‌ல் அரசு பேரு‌ந்துக‌ள் சேத‌ம் அடை‌ந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்