இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசை ந‌ம்பலா‌ம் : கருணாநிதி

வெள்ளி, 16 ஜனவரி 2009 (19:48 IST)
இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌லநலமான முடிவுக்கு ம‌த்‌திஅரசை நாம் நம்பியிருக்கலாம் என்று முத‌ல்வர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரஇ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைப் பிரச்சனையில் கட‌ந்ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் - நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்